Homeசெய்திகள்அரசியல்நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் - சசிகலா புலம்பல்

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

-

- Advertisement -

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்  - சசிகலா புலம்பல்மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது சசிகலா பேசுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்கு பின், நான் சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக, யாரை நம்பி நான் பொறுப்பை ஒப்படைத்து சென்றேனோ, அவர்கள் நான் சிறைக்கு சென்ற 3வது மாதத்திலேயே என்னை கட்சியிலிருந்து நீக்கினாா்கள்.

we-r-hiring

நான்காண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபோது, கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கட்டளையிட்டனர். மேலும் தமிழக எல்லையான ஓசூர் தாண்டி கட்சி கொடியுடன் நான் வந்தால் என்னை கைது செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தினர். சிறையிலிருந்து வந்தவுடன் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது மணிமண்டபம் செல்ல முற்பட்டபோது, திறந்த 2 நாளே அதனை பூட்டிவிட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி எனக்கு அனுமதி மறுத்தனர். இதையெல்லாம் பொறுத்து கொண்டது, இந்த கட்சி தொண்டர்களையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று சசிகலா கூறினாா்

சசிகலாவின் பிரச்சார நிகழ்ச்சிக்காக, சோழவந்தான் தொகுதியின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். அவர் வருவதற்கு முன்பாக, வேட்பாளர் வாக்கு கேட்டு கொண்டிருந்தார். அப்போது பிரச்சாரம் முடிந்ததாக நினைத்து பெண்கள் கலைந்து சென்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் ஓடி சென்று ‘சின்னம்மா வந்து கொண்டிருக்கிறார், அவர் வந்தவுடன் போகலாம்’என கெஞ்சி கூத்தாடி மீண்டும் அழைத்து வந்தனர். ஆனால் அவர்களும் சசிகலா பேச்சை தொடங்கியதும் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

MUST READ