- Advertisement -
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி சுபதினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,100 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 40, 800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


