Homeசெய்திகள்தமிழ்நாடு"பசியோடு வந்தோருக்கு உணவிட்ட மனிதநேயவாதி": கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் சீமான் உருக்கமான புகழ் அஞ்சலி!

“பசியோடு வந்தோருக்கு உணவிட்ட மனிதநேயவாதி”: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் சீமான் உருக்கமான புகழ் அஞ்சலி!

-

- Advertisement -

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தேமுதிக) நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்குத் தனது நெஞ்சார்ந்த புகழ் வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்."பசியோடு வந்தோருக்கு உணவிட்ட மனிதநேயவாதி": கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் சீமான் உருக்கமான புகழ் அஞ்சலி!

திரையுலகின் ஆகச்சிறந்த கலைஞன் இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் திரை வாழ்க்கையையும் அவரது மனிதநேயப் பண்புகளையும் நினைவுகூர்ந்து போற்றியுள்ளார். “தன் கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய ஆகச்சிறந்த திரைக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

we-r-hiring

உணவளித்த வள்ளல்மேலும், விஜயகாந்தின் கொடைத் தன்மையைக் குறிப்பிட்டுள்ள சீமான், “ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணம் கொண்டவர்.

தன்னை நாடி வந்த அனைவருக்கும் சாதி, மத பேதமின்றி அண்ணமிட்டு உபசரித்த மாபெரும் மனிதநேயவாதி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.திரையுலகிலும் அரசியலிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளில், அவரது நற்செயல்களையும், மக்கள் தொண்டுகளையும் நினைவு கூர்ந்து எனது ஆழ்ந்த புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பினாமிகளைக் கைது செய்தால் உண்மையானவர்கள் வெளியே ஓடிவருவார்கள்!” — சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷ பேச்சு!

MUST READ