Homeசெய்திகள்இந்தியாதேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக - ரேவந்த்ரெட்டி

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

-

- Advertisement -

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை செய்தற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்துள்ளது.தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக - ரேவந்த்ரெட்டிடெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி செய்தியாளா்களின் சந்திப்பின் போது,“தொகுதி வரையறை செய்வதற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்தது. மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது அவா்களின் உண்மையான நோக்கம் அல்ல. 850 தொகுதிகளை உயர்த்தி பல மாநிலங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தவே மசோதாவை கொண்டு வந்தனர். மக்கள் விழிப்புடன் உள்ளனர்.

அனைத்து கட்சிகளும் நேற்று மசோதாவை முறியடித்தனர். உள்ளாட்சிகளில் 50% அதிகமாக பெண்களின் பங்களிப்பு இருக்கிறதென்றால் அதை உறுதி செய்தது ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசுதான் காங்கிரஸ் கட்சியானது உள்ளாட்சி முதல் குடியரசு தலைவர் வரை அனைத்து பதவிகளையும் மகளிருக்கு வழங்கி உள்ளது.

we-r-hiring

பாரதீய ஜனதா கட்சி துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை 15-க்கும் மேற்பட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சி ஏன் மகளிர் ஒருவரை தலைவராக தேர்வு செய்யவில்லை என ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளாா்.

அடுத்த ஆண்டு உத்திரபிரதேச தேர்தல் வருகிறது. அதன்பின்னர் பல்வேறு தேர்தல்கள் வர உள்ளது. அந்த அனைத்து தேர்தலிலும் மகளிர் இடஒதுக்கீடு இடம்பெறாது. தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள்ளது.

எந்தெந்த தொகுதிகளை எவ்வளவு பெண்கள் என்பது உள்ளிட்ட அனைத்து தரவுகளும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. புதியதாக கண்டறியவேண்டிய அவசியம் இல்லை. தெலுங்கானா முதல்வர் என்ற முறையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பிணராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் என தென்னிந்திய முதலமைச்சர்களிடம் பேசி இட ஒதுக்கீடு செயல்படுத்த நானே உதவுவேன். தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாரதீய ஜனதா கட்சி என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளாா்.

தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு

MUST READ