Homeசெய்திகள்இந்தியாராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் 'பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

-

- Advertisement -

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ராகவ் சத்தா -'பாஜகவில்  இணைந்தார் – 7 எம்பிக்கள் கையெழுத்துப் போட்ட கடிதத்தை  ராஜ்யசபா தலைவரிடம் கொடுத்தனர்

we-r-hiring

​இது குறித்து ராகவ் சத்தா தனது எக்ஸ் (X) பதிவில் கூறியதாவது,

​”இன்று, இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி, ராஜ்யசபாவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூன்றில் இரண்டு பங்குக்கினர் (2/3) 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

​ஏழு எம்.பி.க்கள் கையெழுத்திட்ட ஆவணம், ராஜ்யசபாவின் கௌரவத் தலைவரிடம் கொடுக்கப்பட்டதாகவும்,  அவரும் மற்ற இரண்டு எம்.பி.க்களும் நேரில் சென்று இந்த கையெழுத்திடப்பட்ட ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்திருந்தாா்.”

​கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைவது சட்டமாகும். அதைச் சுட்டிக்காட்டியே ராகவ் சத்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

​யார் அந்த 7 பேர்?,

ராகவ் சத்தா -'பாஜகவில்  இணைந்தார் – 7 எம்பிக்கள் கையெழுத்துப் போட்ட கடிதத்தை  ராஜ்யசபா தலைவரிடம் கொடுத்தனர்

ராகவ் சத்தாவுடன் சேர்த்து சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், ராஜேந்தர் குப்தா மற்றும் விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளாா். ராகவ் சத்தா ‘விலகல் என்பது துரோகம் மற்றும் நேர்மையின்மையின் வெளிப்பாடு’  என்று ஆம்ஆத்மிக் கட்சியின் நாடாளுமன்ற குழுதலைவர் அனுராக் தண்டா காட்டமாக கூறியுள்ளாா்.

​ராகவ் சத்தா உள்ளிட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது குறித்து, அக்கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா, அவர்களின் நேர்மை மற்றும் நோக்கத்தைக் கேள்வி எழுப்பி மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

​​”ஒரு நபரின் அடையாளம் என்பது அவர்களின் குணநலன்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். மகாத்மா காந்திக்கு சமரசம் செய்து கொள்ளவோ, அடிபணியவோ அல்லது தனது எதிரிகளுடன் கைகோர்க்கவோ வாய்ப்புகள் இல்லையா?

சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங்கிற்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லையா? ஆனால் அவர்கள் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர், அதனால்தான் அவர்கள் வரலாற்றில் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். அவர்கள் போராடத் துணிந்து தங்கள் குணநலனை நிரூபித்தனர்.”ராகவ் சத்தா -'பாஜகவில்  இணைந்தார் – 7 எம்பிக்கள் கையெழுத்துப் போட்ட கடிதத்தை  ராஜ்யசபா தலைவரிடம் கொடுத்தனர்

“ஆனால் ராகவ் சத்தாவுடன் விலகிய 7 எம்.பி.க்களின் குணநலனில் என்ன பிரதிபலிக்கிறது? அது துரோகமும் நேர்மையின்மையுமே ஆகும். அதனால்தான் இவர்கள் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு எம்.பி.யின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தப்படுவதும், அடுத்த சில நாட்களில் ஆறு முதல் ஏழு எம்.பி.க்கள் கட்சியை விட்டு வெளியேறுவதும், அவர்களுக்கு அமலாக்கத்துறை மீதான பயம் இருப்பதையும், அவர்களின் குணநலனில் பலவீனம் இருப்பதையுமே காட்டுகிறது.”

​”பஞ்சாபில் நடைபெறும் நல்ல பணிகளைக் கண்டு கலக்கமடைந்துள்ள பாஜக, இந்த ‘ஆபரேஷன் தாமரை’யைத் தொடங்கியுள்ளது. ஜனநாயக ரீதியாக எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக, இதுபோன்ற சதித்திட்டங்களை நடைமுறை படுத்துகிறது.”

​ராகவ் சத்தாவிற்கு விடுக்கப்பட்ட சவால்:

“ஆம் ஆத்மி கட்சி தனது பாதையிலிருந்து விலகிவிட்டதாக ராகவ் சத்தா நம்பினால், அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு முன்னதாக, கட்சி அவருக்கு வழங்கிய பதவிகளை அவர் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களால் ராஜ்யசபாவிற்கு அனுப்பப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

பஞ்சாபை மீண்டும் வஞ்சித்த பாஜக – கெஜ்ரிவால் காட்டம்

ராகவ் சத்தா -'பாஜகவில்  இணைந்தார் – 7 எம்பிக்கள் கையெழுத்துப் போட்ட கடிதத்தை  ராஜ்யசபா தலைவரிடம் கொடுத்தனர்

​ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா தொடர்பான அரசியல் நகர்வுகள் மற்றும் பஞ்சாப் அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

​​பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை பஞ்சாப் அரசியலிலும், தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​​இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா கட்சியை (BJP) நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். ​”பாஜக மீண்டும் ஒருமுறை பஞ்சாப் மாநிலத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

​கட்சியின் எம்.பி.க்களை வற்புறுத்தியோ அல்லது ஆசை வார்த்தைகள் காட்டியோ பாஜக இழுத்திருக்கலாம் என்று ஆம் ஆத்மி தரப்பில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ​பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு அரசை நிலைகுலையச் செய்ய பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ​பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வலுவான நிலையில் உள்ளது. இந்த விலகல் கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

​https://www.apcnewstamil.com/news/india/supreme-court-slams-mamata-it-is-not-funny-to-see-the-chief-minister-enter-during-an-enforcement-directorate-raid/201159

MUST READ