spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!

-

- Advertisement -

 

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!
File Image

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல் நலக்குறைவுக் காரணமாக, இன்று (மே 03) சென்னையில் காலமானார்.

we-r-hiring

கல்லீரல் பிரச்சனை காரணமாக, கடந்த 15 நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் இருந்த படியே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மனோபாலா காலமானார்.

மனோபாலா இதுவரை 40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்கள், 3 தொலைக்காட்சித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஆகாய கங்கை உள்ளிட்ட வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார்.

பல திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா நகைச்சுவை நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 100- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் மனோபாலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோபாலாவின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ