Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காக கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்கு வருகை தந்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.

we-r-hiring

17-ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ஆம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக்கழகம், சுமார் 35 சதவீத வாக்குகளை பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 இடங்களின் பெரும்பான்மை இல்லாததால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்சியமைப்பதில் கடும் இழுபறி நிலவியது. பெரும்பான்மையை எட்டுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்கள் கழித்து தேவையான பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தற்போது நான்காவது முறையாக ஆளுநரை சந்திக்க மக்கள் பவனுக்கு வந்துள்ளார்.

ஆதரவு கடிதங்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநரின் முடிவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

MUST READ