2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட ஆர். ரமேஷ்குமார் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ்குமார் அவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சபாநாயகர் முன்னிலையில் ரமேஷ்குமார் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இவருடன் அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பிற உறுப்பினர்களும் வரிசையாகப் பதவியேற்றனர். சமீபத்தில் நடைபெற்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிட்ட ரமேஷ்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சா.மு. நாசரை விட சுமார் 76,311 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
