spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடிப்பில் புதிய வெப் சீரிஸ்!

அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடிப்பில் புதிய வெப் சீரிஸ்!

-

- Advertisement -

அதர்வா மற்றும் மணிகண்டன் நடிப்பில் புதிய வெப் சீரிஸ் உருவாகி வருகிறது.

‘கிடாரி’ படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா-மணிகண்டன் இருவரும் இணைந்து புதிய வென் சீரிஸில் நடிக்கின்றனர். இந்த வென் சீரிஸ் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது. மத்தகம்  என்று சீரிஸுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நிகிலா விமல் இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்புகா சிவா இந்த சீரிஸுக்கு இசையமைக்கிறார்.இந்த சீரிஸில் கௌதம் மேனன், தில்னாஸ் இரானி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணார் ரமேஷ், சரத் ரவி, ரிஷிகாந்த் மற்றும் முரளி அப்பாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரிக்கிறது.

மத்தகம்‘ என்ற சொல் யானையின் நெற்றியைக் குறிக்கிறது. இந்த சீரிஸ்  நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியைச் சுற்றி நடக்கிறது. இந்தத் தொடரின் டீஸரில் அதர்வா போலீஸாகவும், மணிகண்டன் கேங்ஸ்டராகவும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதை பார்க்க முடிகிறது.

MUST READ