spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்

மதுரையில் அதிர்ச்சி! கைத்துப்பாக்கியுடன் 2 பேர் சிக்கினர்

-

- Advertisement -

gun

மதுரையில் கைத்துப்பாக்கியுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவுக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது போலீசார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

we-r-hiring

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வீரகனூர் சுபாஷ் என்பவரின் செல்போனில் கைதுப்பாக்கி படம் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உடனே தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் சுபாஷை கைது செய்து விசாரணை நடத்திய போது, சென்னை அண்ணாநகர் கூட்டாளி தனசேகரனிடம் அந்த கை துப்பாக்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது .

இதன் பின்னர் சென்னைக்கு சென்று தனசேகரனை கைது செய்து துப்பாக்கியையும் நான்கு தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை

மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு கும்பலுக்கும் சுபாஷுக்கும் இருந்த முன் விரோதத்தில் வாகனங்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்கும் பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என நினைத்து துப்பாக்கியை தனசேகரன் வசம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிவித்திருக்கிறார் சுபாஷ்.

எஸ். எஸ். காலனி, ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையங்களில் சுபாஷ் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தனசேகரன் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஜெய்ஹிந்த் புரம் கும்பலை சுட திட்டமிட்டு துப்பாக்கியை சுபாஷ், தனசேகரன் இருவரும் கள்ளத்தனமாக வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் போலீசார். அது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ