Homeசெய்திகள்வானிலைதமிழ்நாட்டில் இன்றும் நாளையம் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையம் வெப்ப அலை வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் வெப்ப அலை (Heat wave) வீசக்கூடும். வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. மேலும் சில இடங்களில் வெப்பத்துடன் கூடிய அதிகப்படியான ஈரப்பதம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையம் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். வட மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, 104 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகலாம் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் நோக்கி இருந்து வீசும் வெப்பமான மற்றும் வறண்ட காற்றே இந்த அசாதாரண வெப்ப அலைக்குக் காரணமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையற்ற வெளிச்செல்களை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவதோடு, எலுமிச்சை சாறு, மோர், இளநீர் போன்ற பானங்களை பருகுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தால் உடல் சோர்வு, மயக்கம், நீரிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் இன்று அதிகபட்சமாக 114°F வெப்பநிலை பதிவு – IMD தீவிர எச்சரிக்கை

MUST READ