Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்? - சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி?

கோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்? – சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி?

-

- Advertisement -

“கழிவறை வசதியே இல்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

கோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்? - சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி?

we-r-hiring

தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது கோவில் நிதி பயன்பாடு குறித்து அமைச்சரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

விவாதத்தின் போது, அறநிலையத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களின் வருமானம் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், கோவில்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது முக்கியம் என்றும், சில இடங்களில் கோவில் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பினார். குறிப்பாக, கழிப்பறை வசதி இல்லாத கோவில்களில் பல கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டதன் தேவையை சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். குன்னூரில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும் நோக்கம் இருந்ததாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், கோவில் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், அதற்காக கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். பக்தர்கள் வாகன நிறுத்துமிடத்தை விட அமைதியான தரிசனத்தையே அதிகம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், பெரிய கோவில்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அவசியமான உள்கட்டமைப்பு வசதியாக இருப்பதாகவும், அவற்றின் தேவையை முழுமையாக மறுக்க முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். கோவில் நிதி பயன்பாடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான இந்த விவாதம் சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.

LPG பயனர்களுக்கு அலர்ட்…இந்த நடைமுறைகளை தவறவிடாதீர்கள்…

MUST READ