Homeசெய்திகள்தமிழ்நாடு“30 நிமிட உரையில் 10 ரீல்ஸ் எடுக்கலாம்” – முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

“30 நிமிட உரையில் 10 ரீல்ஸ் எடுக்கலாம்” – முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய 30 நிமிட உரையை சுட்டிக்காட்டி, “முதல்வரின் பேச்சில் இருந்து குறைந்தது 10 ரீல்ஸாவது தேறும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சித்துள்ளாா்.“30 நிமிட உரையில் 10 ரீல்ஸ் எடுக்கலாம்” – முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயின் உரையை கடுமையாக விமர்சித்தார். அரசு தரப்பில் ஊடகங்களுக்கும் முறையான பதில் வழங்கப்படவில்லை என்றும், சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

we-r-hiring

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக பழி சுமத்துவதே அரசின் வழக்கமாகிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் இன்றைய உரை சட்டப்பேரவையை விட ஒரு திரைப்பட படப்பிடிப்பு தளத்தைப் போன்றிருந்ததாக உதயநிதி விமர்சித்தார். சமூக வலைதளங்களில் பரவுவதற்கான காட்சிகள் மற்றும் ரீல்ஸ்களை மனதில் வைத்து உரையாற்றியதாகவும் அவர் கூறினார்.

“சட்டமன்றம் ஒரு ஜனநாயக மேடை. ஆனால் அது சினிமா அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இன்று விசில் சத்தம் கேட்கிறது; நாளை அமைச்சர்கள் பாடல்களுக்கு நடனமாடும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை,” என்று அவர் கிண்டலாகப் பேசினார். முதல்வர் சுமார் 30 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்ட உதயநிதி, “அந்த உரையில் இருந்து குறைந்தது 10 ரீல்ஸ்கள் தயாரிக்கலாம். முழுக்க முழுக்க முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட திரைக்கதை போலவே பேச்சு இருந்தது. அவர் பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்கிடக் கூடாது என்ற சூழல் உருவாக்கப்பட்டது,” என்றார்.

மேலும், செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும் முதலமைச்சர் பதிலளிப்பதில்லை என்றும், சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடர்பாக முதலமைச்சர் முன்வைத்த கருத்துக்கும் உதயநிதி பதிலளித்தார். “குடியரசுத் தலைவர் சட்டப்பேரவைக்கு வரும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவது நடைமுறை விதிகளின் ஒரு பகுதி. அதற்கென தனிப்பட்ட நெறிமுறைகள் உள்ளன. ஆளுநருக்கான நடைமுறைகள் வேறுபட்டவை. இந்த அடிப்படை விதிமுறைகள் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

ஓரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பயன்…கடன் தள்ளுபடி விதிகள் வெளியீடு

MUST READ