செர்பியா துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
செர்பியாவில் அதிகாலை வேலையில் காரில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு உள்ளாக அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கி சூடுகள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன.

தலைநகர் பெல்கிரேடில் அருகே துபோனா என்ற சிற்றூரில் நகரும் காரில் இருந்தவாறு மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
உள்ளூர் செய்து தொலைக்காட்சிகளின் தகவலின் படி மர்ம நபர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர் இதுவரை பிடி படாத நிலையில் அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதலை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட துபோனா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி வரும் போலீசார் ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், கார்களில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை அன்று 13 வயது சிறுவன் பெல்கிரேடில் உள்ள பள்ளி வளாகத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 சக மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் உயிரிழந்தார்.
துப்பாக்கி பயன்படுத்துவது தொடர்பான விதிகள் கடுமையாக உள்ள செர்பியாவில் ஒரு வாரத்திற்குள்ளாக அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கி சூடுகளால் அதிர்ச்சி நிலவுகிறது.