பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜானகி அம்மா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். எஸ்.ஜானகி அவர்களின் மறைவு இந்திய திரைப்பட சங்கீத உலகிற்கே ஏற்பட்டுள்ள மாபெரும் இழப்பாகும். தன் தனித்துவமான திறமையில் தான் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை அவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே இருந்தார். அவர் மிகவும் கடின உழைப்பாளி; ஒவ்வொரு பாடலுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கடுமையாக உழைக்கக்கூடியவர்” என்று இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
எஸ்.ஜானகி மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவான நூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ் திரையிசை வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
