HomeBreaking Newsபௌர்ணமி கிரிவலம்: ஜூலை 29ல் திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

பௌர்ணமி கிரிவலம்: ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

-

- Advertisement -

திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கிரிவலத்தில் கலந்து கொள்வார்கள்.

திருவண்ணாமலை

we-r-hiring

இந்நிலையில், வரும் 29-ஆம் தேதி வரவிருக்கும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரயில் இயக்கப்படும் நேரங்கள்:

  • விழுப்புரம் – திருவண்ணாமலை: ஜூலை 29 அன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடையும்.

  • திருவண்ணாமலை – விழுப்புரம்: மறுமார்க்கத்தில், அன்று மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

நின்று செல்லும் நிலையங்கள்:

பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் இருமார்க்கங்களிலும் பின்வரும் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

  • வெங்கடேசபுரம்

  • மாம்பழப்பட்டு

  • ஆயந்தூர்

  • திருக்கோவிலூர்

  • ஆதிச்சனூர்

  • அண்டம்பள்ளம்

  • தண்டரை

பௌர்ணமி கிரிவலத்திற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நெரிசலைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ