Homeசெய்திகள்இந்தியா​"அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி" - சிபிஐ(எம்)  சாடல்

​”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்)  சாடல்

-

- Advertisement -

“அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!”​"அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி" - சிபிஐ(எம்)  சாடல்​​”மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை முன்வைத்து, அப்பாவி மக்களை ‘அந்நியர்கள்’ என்று முத்திரை குத்தி ஒடுக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளுக்குச் செக் வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அண்மைய தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது. ​அசாம் மாநிலத்தில் வாழும் மக்களைத் தன்னிச்சையாக ‘அந்நியர்கள்’ என அறிவித்த கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ள விவகாரம் விரிவாக அலசப்பட்டுள்ளது.

​அம்பலமான அந்நியர் தீர்ப்பாயங்களின் அராஜகம்
​இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்,

we-r-hiring

​முறையற்ற தள்ளுபடிக்குக் கண்டனம்
நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்திற்கு நேரில் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, எவ்விதமான ஆதாரங்களையும் பரிசீலிக்காமல் கௌஹாத்தி உயர்நீதிமன்றம் மக்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தது. இந்த அநீதியான அணுகுமுறையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாகக் கண்டித்துள்ளது.

​தீர்ப்பாயங்களின் ஒருதலைப்பட்சப் போக்கு
பாஜக அரசின் ஏஜெண்டுகள் போலச் செயல்படும் ‘அந்நியர் தீர்ப்பாயங்களின்’ (Foreigners Tribunals) அராஜகப் போக்கையும், ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளையும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

​"அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி" - சிபிஐ(எம்)  சாடல்

​”மக்களின் குடியுரிமையைப் பறிப்பது வாழ்க்கையைச் சிதைக்கும் செயல்”
​உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கருத்துக்களையும் சுட்டிக்காட்டியுள்ளது, ​”சட்டத்தை ஏமாற்றி அரசாங்கம் செய்யும் எந்தவொரு எதேச்சதிகார நடவடிக்கையும் சட்டப்பூர்வமானது என்று சொல்ல முடியாது. ஒருவரை அந்நியர் என அறிவிக்கும் வேலை இயந்திரத்தனமாகவோ, ஒருதலைப்பட்சமாகவோ அல்லது நியாயமின்றியோ இருக்கக் கூடாது. ​ஒருவரது குடியுரிமையைப் பறிப்பது என்பது அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே சிதைக்கும் செயலாகும். எனவே, இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும்போது அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையில் மட்டுமே நடக்க வேண்டும்.”

​6 மாதங்களுக்குள் மறுவிசாரணை செய்ய உத்தரவு
​பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பழைய தவறான தீர்ப்புகளின் தாக்கம் எதுவும் இல்லாமல், இந்த வழக்குகளை அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாகவும், சுதந்திரமாகவும் மறுவிசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பாயங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ​அதுவரை, பாதிக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதமான கடுமையான அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ​”குடியுரிமை என்ற பெயரில் சிறுபான்மையினரையும், உழைக்கும் ஏழை எளிய மக்களையும் மிரட்டும் மோடி அரசாங்கத்தின் சதிக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, நமது மனித உரிமைப் போராட்டங்களுக்கான மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படும்” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

MUST READ