Homeசெய்திகள்தமிழ்நாடுரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்..." - கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன்,...

ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்…” – கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன், ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!

-

- Advertisement -

“ஒரு தோல்வியால் திமுக அழிந்துவிட்டது என்று நினைப்பவனை விட முட்டாள் யாரும் இல்லை” என்று திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், “தமிழகத்தில் தற்போது ரீல்ஸ் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளனர்.ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்..." - கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன், ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!

​தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில், திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

we-r-hiring

​சினிமாவைப் போல பஞ்ச் டயலாக் பேசுகிறார் முதலமைச்சர் – கீதா ஜீவன் சாடல்
​கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தமிழக வெற்றிக் கழக அரசு ஒரு தேர்தல் விபத்தினால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து ​அவர் பேசுகையில், ​”தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, பெயருக்கு நான்கு தலைவர்களின் படங்களை வைத்துள்ளனர். கொஞ்சம் விட்டால் கலைஞர் படத்தைக் கூட வைத்திருப்பார்கள். மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் இவர்களின் நோக்கம். ​தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனாலும் முதலமைச்சர் விஜய் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, தற்போது தமிழ்நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகம் இருண்ட காலத்திற்கு தள்ளப்படும்.ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்..." - கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன், ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!​எதைப் பற்றியும் கவலைப்படாமல் தற்போது ஒரு ‘ரீல்ஸ் ஆட்சி’ தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் இன்னும் சினிமாவைப் போல பஞ்ச் டயலாக் தான் பேசிக் கொண்டிருக்கிறார், அவர் பேசுவதற்கு அவருக்கே அர்த்தம் தெரியவில்லை. இந்த பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்ட வேண்டும்.”

​திமுகவை அழிக்க நினைப்பவன் முட்டாள்; விஜய்க்கு ஆபத்து அவரால்தான்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி
​இதைத் தொடர்ந்து பேசிய திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜயை ‘கத்துக்குட்டி சீப் மினிஸ்டர்’ என்று சாடினார்.

​அவர் பேசுகையில், ​”அரசியல் அனுபவம் இல்லாமல், பெற்ற தாய்-தந்தைக்கு சோறு போடாமல், கட்டிய மனைவிக்கு சோறு போடாமல், பெற்ற பிள்ளையை நடுரோட்டில் விட்டுவிட்டு, மன்றத்தை வைத்துக்கொண்டு அப்பாவைத் தேடுகிறேன் என்று கூறுபவருக்கு அப்பாவின் புகழும் தெரியாது, அவரைப் பற்றி புரியவும் செய்யாது.

​திமுகவை ஒழிப்பேன் என்று சொன்ன காமராஜருக்கே சிலை வைத்தது திமுக தான். அப்படிப்பட்ட காமராஜராலேயே அழிக்க முடியாத திமுகவை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான இந்த ஆட்சியால் என்ன செய்துவிட முடியும்? இந்த ஆட்சி ஆறு மாதங்கள் கூட நீடிக்காது. இந்த கட்சிக்கு ‘தவெக’ என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக ‘கட்சி தாவல் கட்சி’ என்று பெயர் வைக்கலாம். பிற கட்சிகளில் இருந்துதான் அங்கு தாவுகிறார்களே தவிர, திமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட அங்கு செல்லவில்லை.

ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கத்துக்குட்டி முதலமைச்சர் விஜய்..." - கோவில்பட்டி திமுக கூட்டத்தில் கீதா ஜீவன், ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்!

​இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் விஜய் என்ன சாதித்துவிட்டார்? முதலமைச்சர் விஜய்க்கு நான் சொல்கிறேன், நீங்கள் எல்லாம் ஒரு கத்துக்குட்டி சீப் மினிஸ்டர். நாங்கள் மிசா, எமர்ஜென்சி காலங்களையே பார்த்தவர்கள். ஒரு தோல்வியால் திமுக அழிந்துவிட்டது என்று ஒருவன் நினைப்பான் என்றால் அவனைவிட முட்டாள் யாரும் இல்லை. 1984-ல் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் இருந்த திமுக, அடுத்த இரண்டே ஆண்டுகளில் (1986) நடந்த நகராட்சித் தேர்தல்களில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. எனவே, இந்த தேர்தல் முடிவை வைத்து திமுக தொண்டர்கள் யாரும் சோர்வடைய வேண்டாம்.

​இந்த தவெக ஆட்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது, நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அதற்கு ஆதவ் அர்ஜுனா ஒருவரே போதும். முதலமைச்சர் விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால், அதற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணமாக இருப்பாரே தவிர வேறு யாரும் இல்லை. கொஞ்ச நாட்களாக அவரது பேச்சு சைலண்டாக இருப்பதற்குக் காரணம், கேரளாவில் 920 கோடி ரூபாய் லாட்டரி மோசடி வழக்கில் அவரது மனைவி மற்றும் மாமியார் பெயரில் வழக்கு நடந்து கொண்டிருப்பதுதான்,” என்று ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமாகப் பேசினார். ​இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

“அரசு நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை; மோசமடைந்து வருகிறது!” – தவெக அரசைச் சாடும் திராவிடர் கழக மதிமாறன் அதிரடி நேர்காணல்!

MUST READ