Homeசெய்திகள்கட்டுரை"அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்": விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து...

“அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்”: விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து ஐயநாதன் ஆவேசம்!

-

- Advertisement -

​மாநில உரிமைகளுக்காக தேசிய கட்சிகளை விலக்க வேண்டும் என அதிரடி கருத்து."அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்": விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து ஐயநாதன் ஆவேசம்!

விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான ஐயநாதன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

we-r-hiring

​அவதூறு வழக்குகளும் அதிகார துஷ்பிரயோகமும்
​”அரசியல் மேடைகளில் பேசப்படும் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சிற்கு வழக்கு பதிந்து நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வதே முறையான வழி. அதை விடுத்து, அதிகாலை நேரங்களில் சென்று கைது செய்வது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயலாகும்.”

​”இன்று ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, அதிகார பலம் இருக்கிறது என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இதே நிலை அவர்களுக்கும் நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் இத்தகைய விமர்சனங்களை முதிர்ச்சியுடன் கையாண்டார்.”

​தொகுதி மறுசீரமைப்பு மற்றும் திமுகவின் நிலைப்பாடு
​”ஒன்றிய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவினால் தமிழகம் மற்றும் தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வெகுவாகப் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது; ஏற்றுக் கொண்டால் அது தனது அரசியல் அடையாளத்தையே இழப்பதற்குச் சமமாகும்.”

​தேசிய கட்சிகள் மீதான விமர்சனம் & மேகதாது விவகாரம்
​”மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் எப்போதும் தமிழகத்திற்கு ஆதரவாக நிற்பதில்லை.”  ​”தமிழக உரிமைகளைக் காக்க திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகளைத் தங்களது கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு சுயசார்புடன் போராடுவதே தமிழகத்திற்கு நன்மை பயக்கும். காங்கிரஸ் கட்சியால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை” என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“அரசியல் வியாபாரிகளால் இயங்கும் ஆட்சி”: த.வெ.க அரசு மீது அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கடுமையான விமர்சனம்!

MUST READ