Homeசெய்திகள்தமிழ்நாடுஇளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தாண்டு 70,485 பேர் விண்ணப்பம்!

இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தாண்டு 70,485 பேர் விண்ணப்பம்!

-

- Advertisement -

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பல் மருத்துவப் படிப்பான பிடிஎஸ் (BDS) ஆகிய சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 70,485 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தாண்டு 70,485 பேர் விண்ணப்பம்!

கால அவகாசம் நிறைவு: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிட நடவடிக்கை!
2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

அதன்படி, மொத்தமாக 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக 40,760 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு (Management Quota) இடங்களுக்காக 29,725 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் தீவிரப் பணியில் மருத்துவத் சேர்க்கைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நீட் (NEET) தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விரைவில் அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியானதும் கலந்தாய்வு (Counseling) தேதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

MUST READ