நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், நாட்டின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவையில் நேரில் வந்து பேச மறுப்பது ஏன் என அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு!
நீட் தேர்வு முறைகேடுகள், மாணவர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை மற்றும் நாட்டின் பல்வேறு முக்கிய தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன்காரணமாக அவையில் தொடர் அமளி நிலவி வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்,
அவையை எதிர்கொள்ளப் பயமா?
“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் போது, நாட்டின் முதன்மையான பிரச்சினைகளுக்குப் பிரதமர் நாடாளுமன்ற அவைக்குள் வந்துதான் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து அவையைச் சந்திக்காமல் தவிர்ப்பது எந்த வகையில் நியாயமாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளாா். 
இரவு நேர வீடியோக்களுக்குக் கண்டனம்
ஜனநாயகத்தின் உயரிய மன்றமான நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்காமல், இரவு நேரங்களில் மட்டும் சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் கருத்துகளையும் வெளியிடும் பிரதமரின் அணுகுமுறை முற்றிலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கார்கே சாடினார். மேலும், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் கார்கேவின் இந்தக் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, டெல்லி அரசியல் வட்டாரத்திலும் நாடாளுமன்ற வளாகத்திலும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
“உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்”: பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!
