Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள்...

வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து வரும் வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான (Agri Budget) கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற அதன் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் (சிபிஎம்), விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட முக்கியக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளார்.வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

டெல்டா விவசாயிகளுக்கு மானியமும், எல் நினோ பாதிப்பும்
கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

we-r-hiring

எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், அவர்களின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ஏக்கருக்கு ரூ.15,000 வீதம் மானியம் வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் ஏற்கனவே விவசாயிகள் கவலையடைந்துள்ள நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழையாவது கைக்கொடுத்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைக் காப்பாற்றுமா என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது.

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வலியுறுத்தல்
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முற்றிலுமாக முறியடிக்கத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காகத் தமிழக அரசு உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேலும், அனைவரும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளையில், மேகதாது விவகாரத்திற்காகப் புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் யோசனையைக் கைவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீர்நிலைகள் பாதுகாப்பு & ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம்
தமிழ்நாடு முழுவதும் அரசுக்குச் சொந்தமான 42,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்கள் தற்போது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளன. வரும் மழைக்காலங்களில் தண்ணீரை முழுமையாகச் சேமித்து வைக்கும் வகையில், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நீர்நிலைகளைத் தூர்வாரத் தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இதர முக்கியக் கோரிக்கைகள்
பருவமழை பொய்ப்பு மற்றும் இயற்கைப் பேரிடர்களால் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரண உதவித் தொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைக்குப் பிறகு வீணாகாமல் பாதுகாக்கவும், அவற்றை நீண்ட காலம் தரமாகச் சேமித்து வைக்கவும் ஏதுவாக, மாநிலம் முழுவதும் தேவையான அளவில் நவீன குளிர் பதனக் கிடங்குகளை (Cold Storage) அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தனியார் மாக்கூழ் (Mango Pulp) நிறுவனங்கள் மாம்பழங்களை மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மாங்காய் விவசாயிகள் அனைவருக்கும் முழுமையாகவும் தாமதமின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு தீவிர சட்டப்போராட்டம் நடத்த பாமக நிழல் வரவு-செலவுத் திட்டத்தில் வலியுறுத்தல்!

MUST READ