HomeBreaking Newsஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...

ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

-

- Advertisement -

ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் இன்று காலை வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட இந்த உணவில், இட்லிக்கு ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி ஒன்று செத்துக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

we-r-hiring

சாம்பாரைச் சாப்பிட்ட பணியாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்ததை அடுத்து, உணவருந்திய 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்புடன் கூடிய சிகிச்சையும், பரிசோதனைகளும் வழங்கி வருகின்றனர்.

ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி
ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 817 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ‘பாலாஜி குளோபல்’ என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடரும் அலட்சியம் – பணியாளர்கள் ஆவேசம்
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சி மற்றும் பல்லி விழுவது போன்ற ஆபத்தான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உணவுத் தயாரிப்பில் ஒப்பந்த நிறுவனம் போதிய தரக்கட்டுப்பாட்டைப் பேணத் தவறுவதே இதுபோன்ற விபரீதங்களுக்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக ஆவடி மாநகராட்சி உயர் அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி ரயில் நிலையத்தில் ‘எஸ்கலேட்டர்’ அமைக்கும் பணியில் இழுபறி: 2 ஆண்டுகளாக அவதிப்படும் பயணிகள்!

MUST READ