HomeBreaking Newsதிடீர் விசிட்: மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்று முதலமைச்சர் விஜய் கள ஆய்வு!

திடீர் விசிட்: மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்று முதலமைச்சர் விஜய் கள ஆய்வு!

-

- Advertisement -

நந்தனம் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை; கத்திப்பாராவில் இரண்டாம் கட்டப் பணிகளையும் பார்வையிட்டார்!திடீர் விசிட்: மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்று முதலமைச்சர் விஜய் கள ஆய்வு!

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளின் நிலவரம் குறித்தும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) செயல்பாடுகள் குறித்தும் நேரில் கள ஆய்வு செய்வதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திடீரென மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

we-r-hiring

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், அங்கிருந்து பொதுமக்களோடு ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணித்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

நந்தனம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மெட்ரோ ரயில் இயக்கக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்ட அவர், அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில்களின் சேவையை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கத்திப்பாராவில் இரண்டாம் கட்டப் பணிகள் ஆய்வு
நந்தனத்தில் ஆலோசனையை நிறைவு செய்த பிறகு, முதலமைச்சர் விஜய் நேராகக் கத்திப்பாரா பகுதிக்குச் சென்றார். அங்கு அதிவேகமாக நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த அவர், திட்டப் பணிகளைக் காலதாமதமின்றி விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக்கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்தத் திடீர் கள ஆய்வு மற்றும் மெட்ரோ ரயில் பயணம் பொதுமக்கள் மற்றும் அரசு வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

MUST READ