Homeசெய்திகள்கட்டுரைமாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும்...

மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும் தாக்கு!

-

- Advertisement -

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் ஆளுங்கட்சியான தவெக மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தவெக

we-r-hiring

சினிமா கவர்ச்சியும் மாறிவரும் மக்களின் மனநிலையும்

தமிழகத்தை ஆளும் தவெக அரசின் மிகப்பெரிய பலமாக சினிமா துறையின் மீதான மக்கள் கவர்ச்சியும் வசீகரமுமே உள்ளதாக கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். தலைவர் எதைச் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையில் ஒரு பகுதி மக்கள் இருந்தாலும், தாறுமாறாக உயர்ந்துள்ள மின்கட்டணம் உள்ளிட்ட பொருளாதாரச் சுமையால் தற்போது வாக்களித்த பொதுமக்களுக்கே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டு, சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேட்டூர் அணை திறப்புத் தாமதமும் காவிரி விவகாரமும்

வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, உரிய காலத்தில் திறக்கப்படாததால் குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்ட நிலையிலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீர் விவகாரத்தில் அரசு தரப்பில் எந்தவிதமான தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது மாநிலத்தின் நலன்களை முழுமையாக அடகு வைப்பதற்குச் சமம் என்றும் அவர் விமர்சித்தார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடும் திசைதிருப்பல் அரசியலும்

ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே அடுத்தடுத்து நிகழ்ந்த லாக்கப் மரணங்கள் மற்றும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது பாயும் தொடர் கைது நடவடிக்கைகள் ஆகியவை மாநிலத்தில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படை உரிமைகளும், எதிர்ப்புக் குரல்களும் ஒடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேலும், ஆளுங்கட்சியினர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு வியூகங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், உண்மையான மக்கள் பிரச்சனைகள் மற்றும் ஊழல் சர்ச்சைகள் விவாதிக்கப்படும் போதெல்லாம், மக்களைத் திசைதிருப்பும் செய்திகள் முன்னிறுத்தப்படுவதாகவும், இதன் மூலம் உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

MUST READ