spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

-

- Advertisement -

 

File Photo

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட சுமார் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடக்கிறது.

we-r-hiring

என் கடவுளப் பாத்துட்டேன்… தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தமன்!

தடைச் செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வந்த புகாரில் சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் முன்னாள் வடசென்னை மாவட்டச் செயலாளர் அப்துல் ரசாக் வீட்டில் சோதனை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது வாழ்வின் முடிவு அல்ல, இன்னும் எவ்வளவோ இருக்கு… +2 மாணவர்களுக்கு விஷால் அறிவுரை!

ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

MUST READ