spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் கடவுளப் பாத்துட்டேன்... தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தமன்!

என் கடவுளப் பாத்துட்டேன்… தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தமன்!

-

- Advertisement -

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சந்தித்ததை அடுத்து தமன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, எம்எஸ் தோனி மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரே நான் இன்று தலையைச் சந்திக்க போகிறேன் என்னவென்று முடிந்தால் பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார் தமன்.

இந்நிலையில் கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு பின்னர் தோனியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தமன் பதிவிட்டுள்ளார்.

“இவர் என்னுடைய மனிதர். என்னுடைய கிரிக்கெட் உலகின் கடவுள். இந்தச் சந்திப்பால் எனது இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. உங்கள் மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கான ரசிகர்களில் ஒருவரை நீங்கள் மகிழ்ச்சியை அடைய செய்துள்ளீர்கள். இதை சாத்தியமாக்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

தமனின் இந்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ