
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி, நேற்று (மே 08) இரவு 07.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, சுயாஸ் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும், சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. குறிப்பாக, கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு!
கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக, கேப்டன் நிதிஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரூசெல் 42 ரன்களையும், ஜாசன் ராய் 38 ரன்களையும் எடுத்துள்ளனர். பஞ்சாப் அணி தரப்பில், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ், ஹர்ப்ரீட் ப்ரார் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.


