Homeசெய்திகள்தமிழ்நாடுதொழில் முதலீட்டில் வீழ்ச்சி: புதிய தவெக அரசு மீது கடும் விமர்சனம்!

தொழில் முதலீட்டில் வீழ்ச்சி: புதிய தவெக அரசு மீது கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் புதிய தவெக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது வணிக வட்டாரங்களிலும் அரசியல் களத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொழில் முதலீட்டில் வீழ்ச்சி: புதிய தவெக அரசு மீது கடும் விமர்சனம்!

அண்டை மாநிலங்களின் வளர்ச்சி vs தமிழகத்தின் வீழ்ச்சி
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் தரவுகளின்படி, கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் புதிய முதலீடுகளும் திட்டங்களும் உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் -75% என்ற மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் தனியார் துறை முதலீடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததே முதலீடுகள் முடங்கக் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

we-r-hiring

விவசாயிகள் தவிப்பு மற்றும் விலைவாசி உயர்வு
காவிரி டெல்டா பகுதிகளில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வறட்சியில் தவிப்பதாகவும், அதைப்பற்றி அரசு மௌனம் காப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பது அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

வாக்குறுதிகள் பொய்த்ததாக அதிருப்தி
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த புதிய அரசியல் தலைமை, குறுகிய காலத்திலேயே முழு தோல்வியைச் சந்தித்துள்ளதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். விளம்பர அரசியலைக் கைவிட்டு, மாநிலத்தின் பொருளாதார மீட்சி மற்றும் மக்கள் நலப் பணிகளில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

MUST READ