எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
![]()
விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவல் துறை நடவடிக்கை மற்றும் ஜாமீன் தொடர்பான விவரங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.

அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
ரிமாண்ட் செய்யும் எண்ணமில்லை
கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுவார் என்றும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க (Remand) கோரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.காவல் நிலைய ஜாமீன்
காவல் நிலையத்தில் விசாரணை நிறைவடைந்த பின்னர், உதயநிதி ஸ்டாலின் காவல் நிலைய ஜாமீனிலேயே (Station Bail) விடுவிக்கப்படுவார் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
அரசுத் தரப்பின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், காவல் துறை விசாரணை முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்றே விடுவிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிரான வழக்கு: பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!
