Homeசெய்திகள்கட்டுரைகோழிக் குணம் கொண்ட ‘டம்மி’ அரசு! சட்டமன்றத்தை எதிர்கொள்ளப் பயந்து உதயநிதியைத் தூக்கிய ஆளுங்கட்சி -...

கோழிக் குணம் கொண்ட ‘டம்மி’ அரசு! சட்டமன்றத்தை எதிர்கொள்ளப் பயந்து உதயநிதியைத் தூக்கிய ஆளுங்கட்சி – உயர்நீதிமன்றத்தின் சம்மட்டி அடியால் ஆட்டம் கண்ட சதி!

-

- Advertisement -

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் கேள்விகளைச் சமாளிக்கத் திராணியில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இரவோடு இரவாகக் கைது செய்த ஆளுங்கட்சியின் மட்டமான அரசியல் நாடகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வக்கற்ற இந்த ‘டம்மி’ அரசு, தனது தோல்விகளை மறைக்கக் காவல்துறையை ஏவி நடத்தியுள்ள இந்த ஜனநாயகப் படுகொலை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் தவிடுபொடியாகியுள்ளது.

டம்மி

we-r-hiring

விவசாயிகளின் சாபமும்… மேகதாது மௌனமும்!

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் 14 லட்சம் விவசாயிகள் தண்ணீரின்றித் தவித்து கண்ணீர் சிந்திவரும் நிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதைத் தடுத்து நிறுத்த முதுகெலும்பில்லாமல் மௌனம் காக்கிறது இந்த ஆட்சி. தேர்தல் மேடைகளில் அள்ளிவீசிய பொய் வாக்குறுதிகளால் விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடும் சூழலில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த அவசரக் கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஒன்பது பிரிவுகளின் கீழ் வெறித்தனமான அடக்குமுறை!

எதிர்க்கட்சித் தலைவர் மீது மக்கள் நலப் பிரச்சினைகளைப் பேசவிடாமல் தடுத்து, சட்டமன்றத்திற்குள் அவர் காலடி வைக்கக் கூடாது என்ற தீராத பயத்தில்தான் ஜாமீனில் வெளிவராத ‘பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பாய்ச்சப்பட்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்துவிட்டு ஆளுங்கட்சியினர் வீதிகளில் இனிப்பு வழங்கி கொண்டாடுவதே, இதுவொரு அரசியல் வன்மம் நிறைந்த பழிவாங்கும் நடவடிக்கை என்பதைத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நீதிமன்றத்தின் சம்மட்டியும் ஆளுங்கட்சியின் திணறலும்!

எந்தவொரு முறையான முன்னறிவிப்பும் இன்றி விடியற்காலையில் நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்து அரங்கேற்றிய இந்த அடக்குமுறைக்கு எதிராக, உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உடனடியாகத் தலையிட்டு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். கோர்ட்டில் அடி வாங்கியதும் செய்வதறியாமல் விழித்த ஆளுங்கட்சி தரப்பு, தாங்களே காவல் நிலைய ஜாமீன் வழங்கிவிடுவதாகக் கூறி நாடகமாடித் தப்பிக்க முயல்கிறது. அமைச்சர்களின் தரம் தாழ்ந்த பேச்சுகளையும், பாலியல் புகார்களில் சிக்கிய சொந்தக் கட்சி நபர்களைப் பாதுகாக்கும் யோக்கியதையையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஜனநாயக விரோதப் போக்கைக் கையிலெடுத்துள்ள இந்தச் சர்வாதிகார அரசை மக்கள் மன்றமும் நீதிமன்றமும் விரட்டியடிக்கும் என்று அரசியல் களத்தில் அனல் பறக்கிறது!

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!

MUST READ