Homeசெய்திகள்இந்தியா2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

-

- Advertisement -

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு. 2026-ஆம் ஆண்டுக்கான நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தேசிய தேர்வு முகமையால் (NTA) நியமிக்கப்பட்ட துறைசார் வல்லுநர்களே உடந்தையாக இருந்து வினாத்தாள்களைக் கசியவிட்டுள்ளதாகச் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

we-r-hiring

NTA அதிகாரிகளே உடந்தை:
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாகச் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில், டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகளும் வல்லுநர்களும் இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட மூன்று முக்கியத் துறைசார் வல்லுநர்கள் பண ஆசைக்காக வினாத்தாள்களைக் கசியவிட்டுள்ளனர் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. 3 துறைசார் வல்லுநர்கள் மீது குற்றச்சாட்டு

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள வல்லுநர்கள்:
மனிஷா குருநாத் மந்தாரே (தாவரவியல் வல்லுநர்)
பிரகலாத் வித்தல்ராவ் கல்கர்னி (வேதியியல் வல்லுநர்)
மனிஷா சஞ்சய் ஹவால்தார் (இயற்பியல் வல்லுநர்), இவர்கள் மூவரும் சட்டவிரோதமாகப் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு வினாத்தாள்களை கசியவிட உடந்தையாக இருந்துள்ளனர் என்று சிபிஐ சாடயுள்ளது.

தொடரும் விசாரணை:
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் செயல்பட்ட இந்த வல்லுநர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்னணியில் இருந்த நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகை, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

MUST READ