Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் - லதா ரஜினிகாந்த் பேட்டி!

காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் – லதா ரஜினிகாந்த் பேட்டி!

-

- Advertisement -

காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்தத் தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதற்குத் தேவையான நிதியைக் கண்டிப்பாக வழங்குவார் என்று ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் - லதா ரஜினிகாந்த் பேட்டி!

we-r-hiring

 

சென்னை சேத்துப்பட்டில் ‘மக்கள் மேடை’ அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ இணையதளத் தொடக்க விழா நடைபெற்றது. ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் எளிதில் பயன்பெறும் வகையில் ‘மக்கள் மேடை’ இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

45 ஆண்டுகால மக்கள் சேவை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லதா ரஜினிகாந்த் கூறியதாவது:
“இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவுக்கே உரிய புதிய கல்வி முறையைத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடும் நன்றாக இருக்கும். நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விடப் பெரியது. பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் சேவைகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காவிரி இணைப்பு நிதி குறித்த கேள்விக்கு பதில்

கடந்த 2002ஆம் ஆண்டு காவிரி இணைப்புத் திட்டத்திற்காக 1 கோடி ரூபாய் தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி. காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்வார். ரஜினிகாந்த் எனக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறார். அதைவிட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

மக்களின் பிரச்சினைகளை அரசிடம் சேர்ப்போம் ‘மக்கள் மேடை’ இணையதளம் பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமா என்ற கேள்விக்கு, மக்கள் பிரச்சினைதான் அரசாங்கத்தின் பிரச்சினை. இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நிச்சயமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று லதா ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

“தமிழக அரசு இனி கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது” – பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் பிரபாகர் அதிரடி அலசல்

MUST READ