Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!

அதிமுகவில் ராஜாவாக இருந்தவர்கள் தவெகவில் கூஜாக்களாக மாறிவிட்டனர்: ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு!

-

- Advertisement -

அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதயகுமார்

we-r-hiring

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சாடிப் பேசிய முக்கிய அம்சங்கள்:

விமர்சனத்தின் முக்கிய புள்ளிகள்:

  • ராஜா முதல் கூஜா வரை: அதிமுகவில் இருந்தபோது ரோஜா மாலை, செங்கோலுடன் ராஜாவாக அழகு பார்க்கப்பட்ட தலைவர்கள், தவெகவில் போர் கருவிகளைத் துடைத்துச் சுத்தப்படுத்தும் அலங்காரப் பதவிகளைப் பெற்றுப் பரிதாபமாக நிற்கிறார்கள். நன்றியை மறந்த அவர்களுக்கு விஜய் நெல்லை அல்வா கொடுத்துள்ளார்.

  • பதவி முடக்கம்: விராலிமலை சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் அதிமுகவில் மாநில அளவிலான முகமாக இருந்தனர். ஆனால், தவெகவில் ‘மாவட்ட அமைப்புச் செயலாளர்’ என்ற பதவியை வழங்கி, தொகுதி எல்லையைத் தாண்ட முடியாதபடி அவர்களை முடக்கியுள்ளனர்.

  • தன்மானம் இழப்பு: ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ கதை போல, எடப்பாடியாருக்குத் துரோகம் செய்தவர்கள் இன்று தன்மானத்தை இழந்து தவிக்கிறார்கள்.

அரசு மற்றும் நீதித்துறை விவகாரம்:

  • லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த காட்டமான கருத்துகளைச் சுட்டிக்காட்டி அரசைச் சாடினார்.

  • காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த தவெகவின் கருத்துகளுக்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இருக்கின்ற இடத்தில்தான் மரியாதை கிடைக்கும் என்பதை தவெகவின் சமீபத்திய அறிவிப்புகள் உணர்த்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’!

MUST READ