நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போன்ற கட்சிகள் திமுகவிடம் ஆலோசனை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்துள்ளார்.
திமுகவின் உறுதியான நிலைப்பாடு
“எந்தத் தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தாலும், தமிழ்நாட்டிற்கு எது அவசியமோ அந்த நிலைப்பாட்டில்தான் எங்கள் கட்சித் தலைவர் உறுதியாக உள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல், மாறாகக் கூடுதல் தொகுதிகள் வர வேண்டும் என்பதில் திமுக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோதே, தொகுதி மறுவரை மசோதா குறித்த ஆபத்துகளை முன் கூட்டியே உணர்ந்து தென் மாநில முதல்வர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்திய வரலாறு கொண்டது” என அவர் சுட்டிக்காட்டினார்.

தவெக மீதான விமர்சனம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது ஒரு துர்ப்பாக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், “நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கூட இல்லாத சூழலில், தொகுதி மறுவரை குறித்துப் பேச தவெகவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தமிழ்நாட்டில் அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆளுங்கட்சியான திமுகவிடம் அவர்கள் ஆலோசனை கேட்பதுதான் சரியாக இருக்கும். அவர்களின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்றும் தெரிவித்தார்.
அரசியல் நிலைப்பாடு குறித்துப் தெளிவு
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக பாஜகவுடன் மறைமுகமாக நட்பு பாராட்டுவதாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் அல்ல, நண்பனும் அல்ல; தமிழகத்திற்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அடேங்கப்பா 77% சரிவா? முதலீடுகள் போச்சே… தமிழக தொழில்துறைக்கு என்ன ஆச்சு? முன்னாள் அமைச்சர் விளாசல்!
