Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்புதிய 'டுகாட்டி மான்ஸ்டர் V2' சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம்!

புதிய ‘டுகாட்டி மான்ஸ்டர் V2’ சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம்!

-

- Advertisement -

3 கவர்ச்சிகரமான நிறங்களில் சந்தைக்கு வந்துள்ள பிரீமியம் பைக்; வாகனப் பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு.புதிய 'டுகாட்டி மான்ஸ்டர் V2' சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம்!

பிரபல இத்தாலிய சொகுசு சூப்பர்பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டுகாட்டி’ (Ducati), தனது புதிய ‘மான்ஸ்டர் V2’ (Monster V2) மாடல் பைக்கை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

we-r-hiring

சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் தொடக்க விலை ரூ. 13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை
வாகனப் பிரியர்களைக் கவரும் வகையில் இந்த மான்ஸ்டர் V2 பைக் மூன்று பிரத்யேக வண்ணங்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது:

சிவப்பு (Red)
ஐஸ்பெர்க் வைட் (Iceberg White)
ஸ்போர்ட் லிவரி (Sport Livery)

முன்பதிவு தொடங்கியது
அதிவேகச் செயல்திறன் மற்றும் கவர்ச்சிகரமான ‘ஸ்போர்ட்டி லுக்’ கொண்ட இந்த பைக், இந்தியாவில் உள்ள பிரீமியம் பைக் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள டுகாட்டி விற்பனை மையங்கள் வாயிலாக இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டு, விரைவில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

MUST READ