Homeசெய்திகள்மாவட்டம்கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட...

கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

-

- Advertisement -

நீலகிரியில் மிகவும் பிரபலமானதும், அதேவேளையில் அபாயகரமானதுமான கல்லட்டி மலைப்பாதை வழியாக, வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

தடையும் மாற்று வழியும்:
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான கல்லட்டி மலைப்பாதையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உதகையிலிருந்து மசினகுடி மற்றும் முதுமலை நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு வர அனுமதிக்கப்பட்டு வந்தன.

we-r-hiring

இதற்கிடையே, இப்பாதையில் ஏற்பட்ட அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வருவதற்கும் தடை விதித்தது. இதனால் கர்நாடக, கேரளா உள்ளிட்ட வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் அனைத்தும் கூடலூர் வழியாக சுமார் 75 கிலோமீட்டர் தூரம் சுற்றி உதகைக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டது.

ஏற்பட்ட சிக்கல்கள்:
இந்தத் தடையால் கூடலூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள கக்கநல்லா – தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும், கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் சுற்றுலாத் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வாழ்வாதாரப் பாதிப்பைக் கண்டித்து கடந்த ஜூன் மாதத்தில் மசினகுடி பகுதி மக்கள் கடையடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஜூன் இறுதியில் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களைக் கருதி கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடையை அமல்படுத்தியது.

இன்றைய அதிரடி மாற்றம்:
இதனால் மீண்டும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மசினகுடி பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கையைத் தீவிரமாகக் பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், இன்று மதியத்திற்குப் பிறகு கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் உதகைக்குச் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதுமலை – மசினகுடி – கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்கள் வழக்கம்போல வரத் தொடங்கியுள்ளன. முதுமலையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு வெறும் 37 கிலோமீட்டர் தூரமே உள்ளதால், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைந்த நேரத்தில் உதகையை வந்தடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டியில் இரண்டாம் உலகப் போர் கால வெடிகுண்டுகள்: பூமிக்கடியில் புதைந்து கிடப்பதால் பீதியில் பொதுமக்கள்!

MUST READ