ஸ்மார்ட்போன் மற்றும் டிவி விற்பனையில் முன்னணியில் இருக்கும் சீனாவின் ‘ஷாவ்மி’ (Xiaomi) நிறுவனம், தற்போது இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் (Home Appliances) சந்தையிலும் தனது பிடியை வலுப்படுத்தப் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.
மிஜியா (Mijia) பிராண்ட் அறிமுகம்
இந்தியச் சந்தையில் ஏற்கனவே முன்னணி வகிக்கும் சாம்சங் (Samsung), எல்ஜி (LG) மற்றும் ஹையர் (Haier) ஆகிய நிறுவனங்களுக்குக் கடும் சவாலை அளிக்கும் வகையில், ஷாவ்மி நிறுவனம் தனது துணை பிராண்டான ‘மிஜியா’ (Mijia) மூலமாகப் பெரிய அளவிலான வீட்டு உபயோகப் பொருட்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
என்னென்ன புதிய தயாரிப்புகள்?
ஷாவ்மி நிறுவனம் ஏற்கனவே தனது ‘Home Appliances’ பிரிவில் சில ஸ்மார்ட் சாதனங்களை விற்பனை செய்து வரும் நிலையில், இனி சந்தையின் தேவையை உணர்ந்து பெரிய அளவிலான சாதனங்களையும் களம் இறக்கவுள்ளது.

- வாஷிங் மெஷின் (Washing Machines)
- ரெஃப்ரிஜிரேட்டர் / ஃபிரிட்ஜ் (Refrigerators)
- ஏசி (Air Conditioners)
உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மிஜியா பிராண்டின் கீழ் விற்பனைக்குக் கொண்டுவரத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சந்தையில் புதிய போட்டி!
குறைந்த விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதில் ஷாவ்மி நிறுவனம் பெயர் பெற்றது. தற்போது மிஜியா பிராண்ட் மூலம் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தால், அது இந்தியச் சந்தையில் உள்ள பாரம்பரிய நிறுவனங்களான எல்ஜி, சாம்சங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்தியாவில் ‘Rasad Electric Maxi’ ஸ்கூட்டர்: வடிவமைப்பு காப்புரிமை பதிவு செய்தது வின்ஃபாஸ்ட்
