Homeசெய்திகள்தமிழ்நாடுசெல்போனுக்கு அனுமதி இல்லை! மருத்துவக் கலந்தாய்வுக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகள்!

செல்போனுக்கு அனுமதி இல்லை! மருத்துவக் கலந்தாய்வுக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகள்!

-

- Advertisement -

7.5% அரசுப் பள்ளி உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு இன்று நேரில் அழைப்பு! அசல் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் அட்டையுடன் வர மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல்!செல்போனுக்கு அனுமதி இல்லை! மருத்துவக் கலந்தாய்வுக்கு செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகள்!தமிழகத்தில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சிறப்புப் பிரிவு நேரடி கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) கோலாகலமாகத் தொடங்குகிறது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நிகழாண்டு மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறப்புப் பிரிவுகளான 7.5% அரசுப் பள்ளி மாணவர் உள்ஒதுக்கீட்டிற்கு 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 468, முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு 524 மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டிற்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

we-r-hiring

இன்றைய கலந்தாய்வு நேரலை அட்டவணை
முதல் கட்டமாகச் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு இன்று காலை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் கீழ்க்கண்ட நேரங்களில் நடைபெறுகிறது

  • காலை 8:00 மணி: விளையாட்டுப் பிரிவு (தரவரிசை எண் 1 முதல் 25 வரை).
  • காலை 8:30 மணி: முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் (தரவரிசை எண் 1 முதல் 30 வரை).
  • காலை 9:00 மணி: தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டு விவரங்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக எம்பிபிஎஸ் படிப்பில் 537 இடங்களும் (அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 202), பிடிஎஸ் படிப்பில் 104 இடங்களும் (அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16, சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 88) ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது

  • காலை 10:00 மணி: பொதுப்பிரிவில் நீட் தேர்வு மதிப்பெண் 599 முதல் 469 வரை பெற்று, தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 448 வரை இடம்பிடித்த மாணவர்கள்.
  • மதியம் 12:00 மணி: நீட் மதிப்பெண் 468 முதல் 433 வரை பெற்று, தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரை இடம்பிடித்த மாணவர்கள்.
  • பிரிவு வாரியாக: எஸ்சி (SC) பிரிவில் தரவரிசை 129 முதல் 156 வரை உள்ளவர்களுக்கும், எஸ்சிஏ (SCA) பிரிவில் 21 முதல் 32 வரை உள்ளவர்களுக்கும், எஸ்டி (ST) பிரிவில் 7 முதல் 12 வரை உள்ளவர்களுக்கும் நேரடி கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனச் சேர்க்கைக் குழு அறிவுறுத்தியுள்ளது:

  • கலந்தாய்விற்கான அழைப்புக்கடிதம் தனியாக அனுப்பப்பட மாட்டாது.
  • மாணவர்கள் கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வருகை தர வேண்டும்.
  • அழைப்புப் பெற்ற அனைவரும் கண்டிப்பாக இடங்களைப் பெற முடியும் என்று கூற முடியாது; மதிப்பெண், தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படும்.
  • கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்தவிதத் தொடர்பு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை.

கொண்டு செல்ல வேண்டிய அசல் ஆவணங்கள்

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தவறாமல் கீழ்க்கண்ட அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.

  • நீட் தேர்வு ஆவணங்கள்: நீட் யுஜி (NEET UG 2026) அனுமதி அட்டை (Admit Card) மற்றும் மதிப்பெண் அட்டை (Score Card).
  • கல்விச் சான்றிதழ்கள்: 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள்.
  • அரசுப் பள்ளிச் சான்றிதழ்: தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்ததற்கான உண்மைச் சான்றிதழ் (முதன்மைக்கல்வி அலுவலர் – CEO சான்றொப்பமிட்டது).
  • பிற சான்றிதழ்கள்: மாற்றுச் சான்றிதழ் (TC), பிறப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் பெற்றோரில் ஒருவரின் (தந்தை அல்லது தாய்) சாதிச் சான்றிதழ்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு: காலிப் பணியிடங்கள் குறைவாக இருப்பதால் தேர்வர்கள் கடும் ஏமாற்றம் – 1,500 ஆக உயர்த்த கோரிக்கை!

MUST READ