Homeசெய்திகள்வேலை வாய்ப்புசென்னை டிசிஎஸ்-ல் வேலை செய்ய ஆசையா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

சென்னை டிசிஎஸ்-ல் வேலை செய்ய ஆசையா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

-

- Advertisement -

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 6 காலியிடங்கள்! 8 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!சென்னை டிசிஎஸ்-ல் வேலை செய்ய ஆசையா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், தனது முக்கியச் கிளைகளுக்கு Windows .NET Developer (விண்டோஸ் டாட் நெட் டெவலப்பர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள TCS அலுவலகங்களில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியும் அனுபவமும் கொண்ட வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

we-r-hiring

கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கீழ்க்காணும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் வலுவான அறிவும் திறனும் பெற்றிருப்பது அவசியமாகும்.

  • சி-சார் புரோகிராமிங் (C#.NET) மற்றும் ஊப்ஸ் (OOPS) கோட்பாடுகள்
  • வின்பார்ம்ஸ் (WinForms) மற்றும் வெப் ஏபிஐ (Web API)
  • எஸ்.க்யூ.எல் (SQL) தரவுத்தளம் (Database)
  • சோப் மற்றும் ரெஸ்ட் (SOAP / REST) வெப் சேவைகள்

வேலைவாய்ப்பு சுருக்கம்: ஒரு பார்வையில்

  • நிறுவனம்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
  • பதவியின் பெயர்: Windows .NET Developer
  • மொத்தக் காலியிடங்கள்: 06
  • பணி அனுபவம்: 8 – 10 ஆண்டுகள்
  • பணியிடம்: சென்னை, பெங்களூரு, புனே, மும்பை, இந்தூர்

விண்ணப்பிக்கும் முறை
IT துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்கள், TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் (Online) மூலமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்த தகவல்களை அவர்களின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்புச் செய்தி: எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு – ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

MUST READ