Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!

பிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!

-

- Advertisement -

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி 1.7 லட்சம் பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்ற ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ (Dimagi Naxal Janata Party) என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!

பிரதமர் மோடியின் உரை பின்னணி
செங்கோட்டையில் நடைபெற்ற நாட்டின் சுதந்திர தின விழாவில் உரைநிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதம் ஏந்திய நக்சல்களை அரசு வெற்றிகரமாக ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார். அதேவேளையில், ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகளை விடவும், நம்மைச் சுற்றி உள்ள ‘திமாகி நக்சல்கள்’ (அறிவுஜீவி நக்சல்கள்) மிகவும் ஆபத்தானவர்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

we-r-hiring

ஒரே நாளில் 1.7 லட்சம் Followers
பிரதமரின் இந்த ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தைப் பிரயோகம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளான நிலையில், ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. பிரதமர் பேசிய ஒரே நாளுக்குள் பெரும் கவனத்தைப் பெற்ற இந்த இன்ஸ்டாகிராம் பக்கம், சுமார் 1.7 லட்சம் பின்தொடர்பாளர்களைச் சேர்த்தது.

திடீர் முடக்கம்
குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பயனர்களை ஈர்த்து இணையத்தில் வைரலான இந்த கணக்கு, தற்போது திடீரென முடக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியதன் காரணமாக இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்ததா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் இணையவாசிகளிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அணைகளில் அத்தனை நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை… அதனால் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்  கேள்வி!

MUST READ