Homeசெய்திகள்மாவட்டம்மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!

மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!

-

- Advertisement -

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!

காதலித்து ஏமாற்றியதாகப் புகார்
வீரவநல்லூர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருண்குமாருக்கும் (40), மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், திடீரென அந்தப் பெண்ணிடம் பேசுவதை ஆய்வாளர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீரவநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். அங்கு முறையான தீர்வு கிடைக்காததால், நெல்லை ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அருண்குமார் மீது அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

we-r-hiring

5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியது, மனரீதியாகக் கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகப் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வாளர் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

டி.ஐ.ஜி அதிரடி நடவடிக்கை
காவல் ஆய்வாளர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் அருண்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் ஆய்வாளரே, பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அதிர்ச்சி: கல்லூரி மாணவர்கள் அறைகளில் ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி சோதனை!

MUST READ