கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை
224 தொகுதிகளை கர்நாடகா சட்டமன்றத்திற்கு மே 10-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் பார்ட்டி, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற போன்ற கட்சிகள் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டன. இப்படி பல கட்சிகள் களம் கண்டாலும், பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து என இந்து – இஸ்லாமியர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பெருபான்மை இந்துக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்ட பாஜக படுதோல்வியை அடைந்தது.
ஆரம்பத்தில் 120 இடங்கள் மட்டுமே முன்னிலை வந்த நிலையில் தற்போது மிக வேகமாக முன்னேறி வருகிறது. காங்கிரஸ் கட்சி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 40 இடங்கள் குறைந்து 62 இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி 136 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.