Homeசெய்திகள்தமிழ்நாடு"திடீரென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! ஈரான் போர்தான் காரணமா? சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடராமணன் ஷாக்...

“திடீரென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! ஈரான் போர்தான் காரணமா? சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடராமணன் ஷாக் விளக்கம்!”

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். வெங்கடரமணன் முக்கிய விளக்கமளித்தார்."திடீரென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! ஈரான் போர்தான் காரணமா? சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடராமணன் ஷாக் விளக்கம்!"

உலகளாவிய போர்ச் சூழலின் தாக்கம்
பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் பேசுகையில், “தற்போது நிலவி வரும் ஈரான் போர் சூழல் மற்றும் அதன் காரணமாகப் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றுக்கு இடையே நேரடித் தொடர்பு உள்ளது. இந்த எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, சந்தையில் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

பொருட்கள் தட்டுப்பாட்டைத் தடுக்க நடவடிக்கை
மேலும் தொடர்ந்த அவர், “வருங்காலங்களில் சர்வதேசச் சூழலால் பொருட்களுக்கான தட்டுப்பாடோ அல்லது கடுமையான விலையேற்றமோ ஏற்படும் நிலை உருவானாலும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக விழிப்புடன் செயல்படும். எந்தச் சூழலிலும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான உரிய தடுப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். அமைச்சரின் இந்த விரிவான விளக்கத்தைத் தொடர்ந்து, நுகர்வோர் நலன் காக்கவும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி மக்களுக்குக் கிடைக்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆபத்துக்கு 108 தமிழகத்திற்குத் த.வெ.க — சட்டப்பேரவையில் அமைச்சர் வி. சம்பத்குமார் சுவாரசிய உரை.

MUST READ