நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்குக்கான உண்மையான காரணத்தை நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.


நிலநடுக்கமோ, ஏரி உடைப்போ காரணம் அல்ல! நேபாள வெள்ளப்பெருக்கிற்கு இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு (Glacial Lake Outburst) தான் காரணம் என பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. இருப்பினும், 5.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த வெள்ளத்திற்குக் காரணம் அல்ல என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை கூறுவது என்ன? நேபாள சுற்றுச்சூழல் சங்கம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
செயற்கைக்கோள் படங்கள், வானிலை தரவுகள் மற்றும் ஆற்றுப்பாதையின் நிலப்பரப்பு மாற்றங்களை ஆய்வு செய்ததில், பனிப்பாறை ஏரி உடைந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
ரசுவா பகுதியின் லாங்டாங்-லிருங் (Langtang-Lirung) பகுதியில், சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி, பாறை மற்றும் கழிவுகள் அடங்கிய ஒரு பெரும் பனிப்பாறை செங்குத்தாகச் சரிந்து லெண்டே ஆற்றில் விழுந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட கடுமையான நீர்ப்பெருக்கு போட்டேகோஷி ஆறு வழியாக கீழ்நோக்கிப் பாய்ந்து, இறுதியில் திரிசூலி ஆற்றில் கலந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்பாறை செங்குத்தாக விழுந்ததால் உருவான இந்தத் திடீர் வெள்ளமே பேரழிவிற்குக் காரணம் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேபாள வெள்ளம்: ரூ.50 கோடி தங்கம், ரூ.1.5 கோடி பணத்தை மீட்ட காவல்துறை!
