spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவதார் தி வே ஆப் வாட்டர் - வெற்றி பெருமா.......

அவதார் தி வே ஆப் வாட்டர் – வெற்றி பெருமா…….

-

- Advertisement -

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் முதல் பாகம் வெளியானது. 13 வருடத்திற்கு பிறகு இயக்குநர் தனது முதல் பாகத்தில் இருந்த தொடர்பை பண்டோராவின் மூச்சுக்காற்றுடன் இணைக்கும் வாயிலாக இப்படம் அமைந்துள்ளது.

we-r-hiring

அவதார் பாகம் 1 திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் செய்த வசூல் சாதனையை இன்னும் வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்பே 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம்.

இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவதார் பாகம் ஒன்றை விட இரண்டாம் பாகம் அதித தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இப்படம் மிக பிரம்மாண்டமாக காட்சிகள் அமைப்புகள் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் இந்தாண்டின் ஹிட் படமாக அமையும் என திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அவதார் முதல் பாகம் தமிழகத்தில் அதிக வசூல் செய்தது. அதே போல் இரண்டாம் பாகம் இதனை முறியடிக்குமா…. என்ற கேள்வி எழுந்துள்ளது.

MUST READ