Homeசெய்திகள்தமிழ்நாடுசகோதரர் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் மரிய...

சகோதரர் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்!

-

- Advertisement -

தனது உடன்பிறந்த தம்பியின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தமிழக நிதியமைச்சர் நா. மரிய வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.சகோதரர் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்!

இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் பின்னணிகடந்த 2022-ஆம் ஆண்டு, புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசித்து வரும் அமைச்சர் மரிய வில்சனின் தம்பி மரிய குளோத் என்பவரது வீட்டிற்குள் சொத்துத் தகராறு காரணமாக மோதல் வெடித்தது.

we-r-hiring

அப்போது வீடு புகுந்து தாக்கப்பட்டதாகக் கூற இச்சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜாராவதிலிருந்து விலக்கு கோரி அமைச்சர் தரப்பில் தொடர்ச்சியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. கடந்த வாரம் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற முடியுமா? அவர் என்ன இங்கிலாந்து ராஜாவா?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்ததுடன், சட்டத்திற்கு அனைவரும் சமம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அமைச்சர் மரிய வில்சன் இன்று நேரில் ஆஜரானார்.

இவருடன் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். குடும்பச் சொத்துத் தகராறில் அமைச்சரே நேரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள நிகழ்வு அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு சிறப்பு முக்கியத்துவம்: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி நன்றி!

MUST READ