Homeசெய்திகள்தமிழ்நாடுசுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!

-

- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பவானி ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் எச்சரித்துள்ளார்.சுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பது குறித்த ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

we-r-hiring

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பவானி ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அக் காலத்தில் (அதிமுக ஆட்சியில்) சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தவர்கள் இதுகுறித்துத் தகுந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், தற்போது எனக்கு இந்தப் பணி சற்று எளிதாக இருந்திருக்கும்.

ஆய்வுக்குச் செல்லும்போதெல்லாம், “நீ என்னப்பா புதுசா கேட்கிற? மூன்று தலைமுறையாக நாங்க இதைத்தான் பண்ணிட்டு இருக்கோம்” என்று உரிமையாளர்கள் அலட்சியமாகக் கூறுகிறார்கள். இருப்பினும், நாங்கள் தொடர்ச்சியாகச் சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் சரி, அவர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் சரி, பாரபட்சம் பார்க்காமல் உறுதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆற்றுநீரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாசுபடும் தொழிற்சாலைகள் மீது சமரசமின்றி நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: “எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” என்று உதயநிதி பேச, பதிலுக்குக் கர்ஜித்த ஆதவ்!

MUST READ