Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டு அவமதிப்பு – தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்; செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி....

ஜல்லிக்கட்டு அவமதிப்பு – தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்; செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆவேசப் பேச்சு!

-

- Advertisement -

ஜல்லிக்கட்டு குறித்துத் தவறாகப் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையாவைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஜல்லிக்கட்டு அவமதிப்பு – தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்; செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆவேசப் பேச்சு!

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததுடன், தவெக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

we-r-hiring

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்:

தமிழனுக்கு மூளை இருக்கா இல்லையா? ஒரு நடிகன் என்ன சாதித்தான், என்ன கருத்தை சொன்னான், எதை வைத்து அவனை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று காட்டமாகப் பேசினார்.

“கீ (Key) கொடுத்தால் பாடக்கூடிய, ஆடக்கூடிய பொம்மையைப் போல ஒரு முதலமைச்சர் உள்ளார். முதல் நாள் ரிஹர்சல் எடுத்தால் தான் அடுத்த நாள் பேசுகிறார்” என்றார்.

“சட்டமன்றம் மழலையர் மன்றமாக மாறிவிட்டது. முதலில் அமைச்சர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கே தமிழ் வாசிக்கத் தெரியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “லாட்டரி பரிசு விழுந்தது போல எம்.எல்.ஏ ஆகிவிட்டார், வாயில் அவருக்கு சனி ஆகிவிட்டது” என்று சோழவந்தான் எம்.எல்.ஏவை ஒருமையில் சாடிய அவர், “இந்த அரசு பொய்க்கால் குதிரை அரசு, OPERATION SUCCESS PATIENT DEATH என்ற நிலைமையில் ஐசியுவில் உள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்:

“அமைச்சர் ஒருவரைப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்காக மன்னிப்பு கேட்ட முதலமைச்சர், ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கும் எனக் கூறிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யச் சொல்லி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

“சட்டமன்றம் தற்போது ஜால்ரா மன்றமாக மாறிவிட்டது. மக்களின் பிரச்சனைகளைத் தைரியமாகப் பேசும் சூப்பர் ஸ்டாராக எடப்பாடியார் திகழ்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

ஜல்லிக்கட்டுப் பாரம்பரியத்தை அவமதித்த தவெக எம்.எல்.ஏ உடனடியாக மன்னிப்பு கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மார்க் பணியாளர்கள் சஸ்பெண்ட் எதிரொலி: கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்!

MUST READ