Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு: "நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று வாக்குறுதி கேட்டார்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு: “நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று வாக்குறுதி கேட்டார்!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமையன்று விரிவான பதில் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு: "நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று வாக்குறுதி கேட்டார்!

மேலும், தான் பதிலளிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டதுடன், அதற்கு அனைவரும் வாக்குறுதி (Promise) அளிக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாகவும் உறுதியாகவும் கூறினார்.

we-r-hiring

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களின்போது பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “அனைத்து விவகாரங்கள் மற்றும் கேள்விகளுக்கும் வரும் திங்கட்கிழமையன்று நான் விரிவான பதில்களைத் தருகிறேன். ஆனால், நான் பதிலளிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட யாரும் பாதியில் எழுந்து ஓடிவிடக்கூடாது; அதற்கு அனைவரும் பிராமிஸ் (Promise) செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சு அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சரின் பதிலுரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை!” – தமிழக அரசை விளாசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

MUST READ